“என்னை காப்பாற்றுங்கள்” 4 விரல்களை இழந்து கதறும் வெளிநாடு ஊழியர் – டிக்கெட் எடுக்கவே பணம் இல்லை என கண்ணீர் விடும் சோகம்!

வெளிநாடு வேலை என்பது முன்பு போல இல்லை என்றும், கற்பனை வேறு! நிஜம் வேறு… என்பதை ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு சொல்லிக் காட்டுகின்றன.
மஸ்கட் நாட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் “என்னை காப்பாற்றுங்கள்”… என புலம்பும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வடிவேலு என்ற அந்த ஊழியர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர். அவர் மஸ்கட்டுக்கு வந்து 4 மாதங்கள் ஆவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் அந்த மாதிரியான வேலைகளில் பெண்கள்… கஸ்டமருக்கு நல்ல கவனிப்பு; சிக்கிய 7 பெண்கள்
வேலையின்போது டைல்ஸ் விழுந்து 4 விரல்கள் பாதிக்கப்பட்டதாகவும், சொந்த ஊருக்கு வர முடியாமல் தவிப்பதாகவும் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார்.
தாம் சொந்த ஊர் செல்ல நிறுவனம் பணம் கட்ட சொல்வதாகவும், என்னிடம் விமான டிக்கெட் எடுக்க கூட பணம் இல்லை என புலம்பும் அந்த ஊழியரை காணும்போது மனது வலிக்கிறது.
தாம் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன், குடும்பத்துக்கு நான் ஒரே பிள்ளை எனவும் அவர் அந்த வீடியோவில் கண்ணீருடன் சொல்கிறார்.
இருப்பினும், தற்போது அவருக்கு பலர் உதவி செய்து வருவதாகவும், அவர் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Video : https://www.facebook.com/sundarkasimuthu.k/videos/414036960569314
சிங்கப்பூரில் ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரி கோர விபத்து; இருவர் பரிதாபமாக பலி – மருத்துவமனையில் 6 பேர்