இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இளைஞர் – சுமார் 12000 கி.மீ… தமிழகத்தில் உற்சாக வரவேற்பு!

சிங்கப்பூருக்கு கேரளாவில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார் இளைஞர் ஒருவர். இயற்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பயணம் மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
22 வயதான ஹர்சேந்திரா, கர்நாடகத்தை சேர்ந்தவர். அவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இயற்க்கையின் மீது மிகுந்த ஆர்வம் இவருக்கு உண்டு.
இதற்கு முன்னர் நடந்தே பெங்களூரூ டு காஷ்மீர் சென்றுள்ளார் இந்த இளைஞர். அப்போது அவர் 2,700 கி.மீ நடந்து சென்றதாகவும் அறியப்படுகிறது.
தற்போது, இயற்கையை பாதுகாக்க வேண்டி கேரளாவில் இருந்து நம்ம சிங்கப்பூருக்கு சைக்கிள் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார் அவர்.
இந்த பயணம், இந்திய நாட்டின் தந்திர தினத்தன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கியது, அவர் நேற்று நம்ம தமிழ்நாட்டின் நாமக்கல் வழியாக சேலம் சென்றார்.
இந்த பயணத்தை அடுத்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த பயணம் காஷ்மீர், லடாக் பிறகு நேபாளம், பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து, மலேசியா அதன் வழியாக பின்னர் சிங்கப்பூர் சென்று முடியும், என்றார்.
“இதில் நான் சுமார் 12 ஆயிரம் கிமீ சைக்கிளில் பயணம் செய்து செல்கிறேன்” என்று அவர் கூறினார்.