இந்தியர் விபத்தில் பலி – பரிதவிக்கும் குடும்பம்; சிங்கப்பூரில் மரணம் புரியாத புதிர்

Indian worker death in Singapore

சுவா சூ காங் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் 35 வயதான இந்திய ஊழியர் ஃபோர்க்லிஃப்ட் பளுதூக்கும் இயந்திர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த ஜூலை 7 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது, இந்த ஆண்டு மட்டும் வேலையிடத்தில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

ஃபோர்க்லிஃப்ட்டின் பின்னால் நின்று கொண்டிருந்த அவர், தூணில் கேபிளைக் கட்டிக்கொண்டிருந்தபோது ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் திடீரென பின்னோக்கி சாய்ந்து இந்த சம்பவம் நடத்ததாக கூறப்படுகிறது.

இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Mega Engineering நிறுவனத்தில் பணிபுரிந்தவர் அவர். இது தொடர்பாக அவருடன் வேலை பார்த்த 24 வயது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button