சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்; தமிழ்நாட்டில் உள்ள அவரின் வீட்டில் நடந்த கொடூரம் – உஷார்

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் தமிழக ஊழியர் வீட்டில் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஜாபர்அலி (வயது 56) என்பவர் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்தவர். இவர் சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்தியர் விபத்தில் பலி – பரிதவிக்கும் குடும்பம்; சிங்கப்பூரில் மரணம் புரியாத புதிர்
இந்நிலையில் தனது அண்ணன் மகளின் திருமணத்துக்காக தமிழகம் வந்த ஜாபா் அலி, சிங்கப்பூரில் இருந்து கடந்த 1ம் தேதி குடும்பத்துடன் சிதம்பரம் வந்தார்.
இவரின் மகள் சிங்கப்பூரில் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், அனைவரும் சிதம்பரம் வீட்டுக்கு வந்தனர். ஜாபர்அலி மகள் லேப்டாப் மூலம் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென இன்டர்நெட் கட் ஆனது.
பின்னர், மகள் வேலை பார்க்க வேண்டும் என்று அந்த குடும்பம் அவரின் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது மர்ம கும்பல் கைவரிசையை காட்டியுள்ளனர்.
நண்பர் வீட்டில் இருந்து பள்ளிப்படை வீட்டுக்கு அவர்கள் நள்ளிரவில் வர, அப்போது வீட்டின் கேட் மற்றும் முன்பக்க கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன.
உள்ளே சென்று பார்த்தால் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.