வேண்டுமென்றே அத்துமீறி பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்த சந்தேகத்தின்பேரில் 11 பேர் கைது

வேண்டுமென்றே அத்துமீறி பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்த சந்தேகத்தின்பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், 25 – 59 வயதுக்குட்பட்டவர்கள் என்று சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.
சகோதரியை கொலை செய்ததாக சகோதரர் மீது குற்றச்சாட்டு
இதில் 10 ஆண்களும் ஒரு பெண்ணும் டுரியான் பறிக்க மண்டாய் சாலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என SPF செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் மாண்டாய் சாலை பகுதியில் சண்டையில் சிலர் ஈடுபட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
பின்னர், SPFஇன் உட்லேண்ட்ஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
வேண்டுமென்றே அத்துமீறல் தொடர்பான குற்றத்திற்கு S$1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.