சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 117 பேருக்கு அபராதம்

சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக 117 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் கடந்த வார இறுதியில், சாங்கி கடற்கரை பூங்காவில் 17 பேர் கொண்ட குழு ஒன்றும், மேலும் 13 பேர் கொண்ட மற்றொரு குழு ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலும் பிடிபட்டது.
சிங்கப்பூரில், வேனை தவறாக ஓட்டி வடிகாலில் தள்ளிய சிறுமி..!
இந்த விதி மீறல்களில் சுமார் 1,800 பேருக்கு எச்சரிக்கை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, 442 ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஹோட்டல் அறையில் 11 பேர் கொண்ட குழு கூடியிருந்ததாகவும் சிங்கப்பூர்ப் பயணத் துறைக் கழகம் தெரிவித்துள்ளது.
அந்த ஹோட்டலுக்கு S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் ஜூலை 24 வரை 30 நாட்களுக்கு அறை முன்பதிவுகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் அடிவாரத்தில் இறந்து கிடந்த பெண்!