சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 158 பேர் மீது விசாரணை

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக குதிரை பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 158 பேரை காவல்துறை விசாரித்து வருகிறது.
மேலும், COVID-19க்கு எதிரான பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு அவர்கள் கட்டுப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : உருமாறிய கொரோனா வகைகளுக்கு Pfizer, Moderna மருந்துகள் சிறந்ததா? – சிங்கப்பூர் நிபுணர் குழு விளக்கம்
இன்றைய (ஜூன் 8) செய்தி வெளியீட்டில், 36 முதல் 83 வயதுக்குட்பட்ட, 147 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் அதில் அடங்குவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
டெலோக் பிளங்கா கிரஸண்ட், புக்கிட் மேரா வியூ, செரங்கூன் சென்ட்ரல், பெடோக், புக்கிட் படோக், உட்லேண்ட்ஸ், மார்சிலிங் மற்றும் யுஷுன் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த ஏப்ரல் 24 முதல் ஜூன் 6 வரை, சட்டவிரோத குதிரை பந்தய நடவடிக்கைகளுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், தீவு முழுவதும் செயல்படுவதற்கு HDB அதிகாரிகளும் ஆதரவளித்தனர்.
இந்த நடவடிக்கைகளின்போது, S$76,000க்கும் அதிக பணம், மேலும் பல மொபைல் போன்கள் மற்றும் பந்தயத்தின் பதிவுகள் என்று நம்பப்படும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணைகள் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் துப்புரவு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் ஊதிய உயர்வு