தோ பாயோவில் 26வது மாடியில் இருந்து விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு

தோ பாயோவில் உள்ள வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக பிளாக்கின் அடிவாரத்தில் இரண்டு சிறுமிகள் கடந்த ஏப். 3ஆம் தேதி இரவு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அன்று இரவு 10 மணியளவில் பிளாக் 143, தோ பாயோ லோராங் 2இல் இயற்கைக்கு எதிரான இந்த மரணம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளும் பிளாக்கின் அடிவாரத்தில் அசைவில்லாமல் கிடந்ததைக் கண்டனர்.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை இரு சிறுமிகளும் சம்பவ இடத்தில் இறந்ததாக தெரிவித்தனர். அவர்கள் 26வது மாடியில் இருந்து விழுந்ததாக TODAY குறிப்பிட்டுள்ளது.
இரு சிறுமிகளும் மீட்டர் தொலைவு இடைவெளியில் காணப்பட்டதாக சீன மொழி செய்தித்தாள் ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.