சிங்கப்பூரில் 24 தேர்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் சினோவாக் தடுப்பூசி – ஒரு டோஸுக்கு S$10- $25 கட்டணம்

சிங்கப்பூர் மக்கள் விரைவில் பல தனியார் சுகாதார நிலையங்களில் இருந்து சினோவாக்-கொரோனவாக் (Sinovac-Coronavac) கோவிட் -19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும்.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கிளினிக்குகள் சட்டத்தின்கீழ், 24 தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் (MOH) செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தெலோக் பிளாங்கா டிரைவ் சந்தை ஊழியர்களுக்கு கட்டாய COVID-19 பரிசோதனை
இருப்பினும், சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசி திட்டத்தின் பகுதியாக சினோவாக் தடுப்பூசி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
தற்போது 200,000 டோஸ்கள் இருப்பு உள்ளதாகவும், மேலும் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி பெற்ற நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி கட்டணம் ஒரு டோஸுக்கு உட்பட அனைத்து 24 நிலையங்களின் முழு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது:
இதையும் படிங்க : சிங்கப்பூரில் 20 மசாஜ் பார்லர்களை தற்காலிகமாக மூட உத்தரவு