வெளிநாட்டு ஊழியர்களே உஷார் – சிக்கிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 24 ஊழியர்கள்: சிங்கப்பூரில் இந்த தப்பை செய்யாதீங்க!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வேலை நேரத்தில் ஓய்வு எடுக்கும் போது சிகரெட் புகைத்தார் அதுவே அவருக்கு எமனாக மாறியுள்ளது.
மரைன் பரேடில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த ஊழியர் அதற்கு அபராதமாக ஒரு மாத சம்பளத்தை கொடுக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.
என்ன நடந்தது என்றால்.. தீர்வை செலுத்தப்படாத கள்ள சிகரெட்டைப் புகைத்ததால் ஊழியருக்கு S$500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; மனைவி கழுத்தில் 5 பவுன் சங்கிலி பறிப்பு – பட்டப்பகலில் மர்ம கும்பல் துணிகரம்
பங்களாதேஷ் நாட்டவர்
33 வயதான பங்களாதேஷ் நாட்டவரான அவர் சிகரெட்டை காலியான சட்டவிரோத சிகரெட்டு பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார், அப்போது சுங்க அதிகாரிகளிடம் அவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதற்கு “இங்கே ஒரு பாக்கெட் சிகரெட் விலை என்பது நாம் வாங்கும் சம்பளத்திற்கு மிக அதிகம், தங்கும் விடுதியில் வாங்கினால் $5 மட்டுமே,” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: “நீ வெர்ஜின் பெண்ணா.. ஆபாச வீடியோ பார்” – 16 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஊழியர்
மீண்டும் பயன்படுத்த மாட்டேன்
அவர் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் குறிப்பிடுகிறார். ஆனால், 20-சிகரெட் பேக் டூட்டி-பெய்டு சிகரெட்டுகள் S$12 முதல் S$14 வரை செலவாகும்.
மேலும், சட்டவிரோத சிகரெட்டுகளை மீண்டும் பயன்படுத்த மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
24 வெளிநாட்டு ஊழியர்கள் சிக்கினர்
சைனாடவுன் மற்றும் கெய்லாங் போன்ற பகுதிகளில் சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த சனிக்கிழமையன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 32 மற்றும் 70 வயதுக்குட்பட்ட 33 பேர் சிக்கினர்.
அவர்களில் ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள், மீதமுள்ளவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்.
தேவை இல்லாத செய்திகளை தவிர்த்து, சிங்கப்பூர் “தமிழ் ஊழியர்கள்”, “வேலைவாய்ப்புகள்” தொடர்பான செய்திகளை மட்டும் அறிந்திட நம் டெலிக்ராம் பக்கத்தில் இணைந்து இருங்கள்
இதையும் படிங்க: சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அதிரடி அறிவிப்புகள்