சிங்கப்பூரில் புதிதாக 35 பேருக்கு COVID-19 பாதிப்பு – MOH

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 7) நண்பகல் வெளியான தகவலின்படி, புதிதாக 35 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், உள்நாட்டில் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
மற்றவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், அவர்கள் சிங்கப்பூர் வந்ததில் இருந்தே வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர் அல்லது தனிமையில் வைக்கப்பட்டனர் என்றும் அமைச்சகம் புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.
அதே போல வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலும் புதிய COVID-19 வைரஸ்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 60,554 COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.