சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 பேர் கைது

சிங்கப்பூர் உள்ளே சட்டவிரோதமாக நுழைய முயன்ற சந்தேகத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஜூன் 24) அதிகாலை, துவாஸுக்கு வெளியே உள்ள நீரில் சட்டவிரோதமாக அவர்கள் நுழைய முயன்றுள்ளனர்.
21 முதல் 38 வயதுக்குட்பட்ட அந்த ஐந்து பேரை, அதிகாலை 4.45 மணியளவில் கடலோர காவல்படை கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்!
அவர்கள் லூப் பார்க் படகுத்துறை கரையை நோக்கி நீந்திச் சென்றதாக அதிகாரிகள் நம்புவதாக கூறப்பட்டுள்ளது.
கடலோர காவல்படை, ஜுராங் பொலிஸ் பிரிவு, கூர்க்கா படை மற்றும் சிறப்பு நடவடிக்கை அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் விசாரணைக்காக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் அனுப்பப்பட்டனர்.
குடிநுழைவு சட்டத்தின்கீழ், சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழையும் நபர்களுக்கு, 6 மாதம் சிறை, குறைந்தது 3 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இந்திய இனத்தவர் மீது இன ரீதியாக அவமதிப்பு – சிங்கப்பூரருக்கு 4 வாரம் சிறை