கல்வித்துறையில் 80 சதவீதத்திற்கும் மேலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு

சிங்கப்பூரில் கல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 10ஆம் தேதி கல்வித்துறையில், முதல் தொகுதியாக கிட்டத்தட்ட 50,000 ஊழியர்களுக்கு COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்புகள் அனுப்பப்பட்டதாக கல்வி அமைச்சர் வோங் இன்று தெரிவித்தார்.

இவர்களில், அழைக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

சிலர் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளனர் என்று திரு வோங் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி, சமூகத்தில் நோய் பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பாதுகாப்பான மேலாண்மை, பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் போன்ற நடவடிக்கைகளுடன் முன்னேறுவதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.

Related Articles

Back to top button