ஆங் மோ கியோ குடியிருப்பில் தீ: 130 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம் – 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

பிளாக் 123, ஆங் மோ கியோ அவென்யூ 6இல் உள்ள HDB குடியிருப்பில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
இதனை சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கடைவீட்டில் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
இன்று காலை 9:40 மணியளவில், ஏழாவது மாடியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து SCDF-க்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீப்பிடித்த வீட்டின் ஏழாவது மாடி படிக்கட்டில் இருந்த ஒருவரை, SCDF தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக காப்பாற்றினர்.
பாதிக்கப்பட்ட பிளாக்கின் 5 முதல் ஒன்பதாவது மாடி வரை உள்ள சுமார் 130 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், ஏழு குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை மற்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது விசாரணையில் உள்ளது.
இதையும் படிங்க : பூன் லேவில் நடந்த இறுதி சடங்கில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட ஆடவர் கைது