HDB வீட்டில் ஜன்னல் விளிம்பு சுவற்றில் காயங்களுடன் கிடந்த பெண்!

சிங்கப்பூர்: HDB வீட்டில் ஜன்னல் விளிம்பு சுவற்றில் காயங்களுடன் கிடந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:20 மணியளவில், பிளாக் 447 ஆங் மோ கியோ அவன்யூ 10இல் உதவி கோரி அழைப்பு வந்தது என சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மீட்பு படை வீரர்கள் வந்து பார்த்தபோது அந்த பெண் 2வது மாடி சமையலறை பகுதிக்கு வெளியே உள்ள ஜன்னல் விளிம்பு சுவற்றில் கிடந்துள்ளார்.

அந்த பெண்ணின் தலை, கைகள், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது என சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் அவசர மருத்துவ சேவைகள் குழுவினர் குறிப்பிடுகின்றனர்.

அவர் பத்திரமாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related Articles

Back to top button