உடல் எடையை குறைப்பதாக விற்பனை செய்யப்படும் நான்கு தயாரிப்புகளில் தடைசெய்யப்பட்ட பொருள்

உடல் எடையை குறைப்பதாக ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் நான்கு தயாரிப்புகளில் தடைசெய்யப்பட்ட பொருளான Sibutramine இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது என்று சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) இன்று (மார்ச் 25) தெரிவித்துள்ளது.

நான்கு தயாரிப்புகள்:
  • Flash Slim
  • Leedee Botanical Beverage Mix Pineapple Juice Powder with African Mango
  • Quinn S Amyera
  • Schocolite Double Chocolate Cookies Drink with Hoodia Gordinii Extract and L-Carnitine

Flash Slim உட்கொண்ட நுகர்வோருக்கு படபடப்பு, குமட்டல், தூக்கமின்மை மற்றும் அதிக வியர்வை போன்ற கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக HSA தெரிவித்துள்ளது.

அனைத்து விற்பனையாளர்களும் விநியோகிப்பாளர்களும் இந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று HSA செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் உடனடியாக இதுபோன்ற தயாரிப்புகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவரை அணுகவும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button