கிளார்க் கீ அருகே சிங்கப்பூர் ஆற்றில் 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

சிங்கப்பூரில் கிளார்க் கீ அருகே சிங்கப்பூர் ஆற்றில் இரண்டு சடலங்கள் இன்று (ஏப். 18) கண்டெடுக்கப்பட்டன.
ஆற்றில் இருந்து சடலத்தை மீட்க உதவி வேண்டி சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படைக்கு (SCDF) இரவு 2 மணியளவில் அழைப்பு வந்தது.
தேடுதல் வேட்டை
SCDF அதிகாரிகள் சம்பவ இடத்தில் வந்து பார்த்தபோது சடலங்கள் ஏதும் தென்படவில்லை என்று அது கூறியது.
அதன் பின்னர் SCDF பேரிடர் உதவி, மீட்புக் குழுவில் இருந்து வந்தவர்கள் நீருக்கடியில் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
இரு ஆண்களின் சடலங்கள்
நீருக்கடியில் தேடல் நடவடிக்கைகளுக்கு உதவ சோனார்-இமேஜிங் கருவிகளைப் பயன்படுத்தும், தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனம் பயன்படுத்தப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டையில் 26 மற்றும் 28 வயதுடைய இரு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சதி திட்டம் இல்லை
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சதி திட்டம் ஏதும் இதில் சந்தேகிக்கபடவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.