பெடோக் ரிசெர்வாயரில் ஆடவர் சடலம் ஒன்று மிதந்த நிலையில் கண்டெடுப்பு

பெடோக் ரிசெர்வாயரில் (Bedok Reservoir) நேற்று காலை, சடலம் ஒன்று மிதந்த நிலையில் கண்டறியப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் காலை 7 மணிக்கு முன்னதாக நடந்ததாக கூறப்படுகிறது. 76 வயதுடைய ஆடவர் அவர் என்று ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
உதவிக்காக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
உடல் மீட்கப்பட்ட பின்னர் துணை மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதிப்படுத்தினர்.
காவல்துறையின் ஆரம்ப விசாரணையில், சதிச்செயல் ஏதும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளது.
கூடுதல் விசாரணைகள் நடந்து வருகின்றன.