16 வயது சிறுவனுக்கு தவறாக போடப்பட்ட மாடர்னா கோவிட்-19 தடுப்பூசி

சிங்கப்பூரில் மாடர்னா (Moderna) கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் 16 வயது மாணவனுக்கு தவறாக போடப்பட்டுள்ளது.
கோலம் ஆயர் சமூக மன்ற தடுப்பூசி மையத்தில் அந்த சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் கல்வி அமைச்சகம் (MOE) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ட்ரேஸ் டுகெதர் கருவியை ஒருமுறைக்கு மேல் தொலைத்தால் மீண்டும் பெற கட்டணம்
தற்போது சிங்கப்பூரில், மாடர்னா கோவிட் -19 தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 12 – 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு Pfizer-BioNTech தடுப்பூசிகள் மட்டுமே போடப்படுகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சிறுவன் சுமார் 50 நிமிடங்கள் கண்காணிக்கப்பட்டார். பின்னர், அவர் நன்றாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது – மனிதவள அமைச்சகம்