லாரி-பேருந்து மோதி கடும் விபத்து; பேருந்தில் பயணித்த 20 பேரின் நிலை?

மலேசியா Genting Highlands பகுதியின் அருகே பேருந்து-லாரி ஆகிய இரண்டும் மோதி விபத்து ஏற்பட்டது.

அந்த பேருந்தில் 20 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 5 நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிங்கப்பூரில் பலியான மேலும் ஒரு ஊழியர் – வாழ்வா? சாவா? வாழ்க்கை போராட்டம்

பேருந்தில் 15க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர் பயணிகளும் இருந்துள்ளனர்.

விபத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் என்ன என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிடவில்லை.

உறவினர்களிடம் காயத்தின் அளவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் இருந்து 2 சிங்கப்பூரர்கள் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

பேருந்தில் இருந்த அனைத்தும் சேதம் அடைந்ததாக, இந்த சம்பவத்தை அவர்கள் இருவரும் நினைவு கூர்ந்தனர்

“தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென சத்தம் கேட்டது, பின்னர் பார்த்தால் திடீரென முன் இருக்கையில் மோதி முகத்தில் ரத்தம் ஏற்பட்டு கீழே விழுந்தேன்” என்று அதில் ஒருவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்; தமிழ்நாட்டில் உள்ள அவரின் வீட்டில் நடந்த கொடூரம் – உஷார்

Related Articles

Back to top button