உட்லண்ட்ஸில் ஜன்னல் வழியாக வெளியேறிய குழந்தை; “விழுந்தால் என்ன ஆவது” – கடுப்பில் நெட்டிசன்கள்

உட்லண்ட்ஸில் உள்ள Forestville எக்ஸிகியூட்டிவ் காண்டோமினியத்தில் குழந்தை ஒன்று கொல்லைப்புற ஜன்னல் வழியாக ஏறுவதைக் கண்டு வாசகர் ஒருவர் பெரும் அச்சம் அடைந்தார்.
இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 29) நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரி கோர விபத்து; இருவர் பரிதாபமாக பலி – மருத்துவமனையில் 6 பேர்
அன்று இரவு 9.30 மணியளவில் தான் கண்ட சம்பவத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
“இது போன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. குழந்தை ஏறுவதைத் தடுக்க ஜன்னல் கிரில் இரும்புகளை அவர்கள் அமைக்க வேண்டும்” என்றும் அவர் கூறியிருந்தார்.
புகைப்படங்களில் அந்த குழந்தை ஆறாவது மாடியில் இருந்தது போல தெரிகிறது.
கெயிலாங் ஈஸ்ட் பார்க் அருகே இறந்து சடலமாக கிடந்த நபர் – யார் அவர்?