சைனாடவுனில் உள்ள இரண்டு உணவகங்களை மூட உத்தரவு

பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக சைனாடவுனில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த உணவகங்களை தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கோவிட்-19 காரணமாக மேலும் ஒருவர் மரணம்

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 25) இரவு இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பாதுகாப்பு அமலாக்க சோதனையை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வார தடையைத் தொடர்ந்து, சுமார் 20 உணவகங்களில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.

விதிகளை மீறி செயல்பட்ட 4 வாடிக்கையாளர்களுக்கு தலா S$300 அபராதம் விதிக்கப்பட்டது.

4 பேர் கொண்ட குழுவை ஒரே மேசையில் அமர்ந்து உண்ண அனுமதித்த உணவகத்திற்கு S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 10 நாட்கள் கடையை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 117 பேருக்கு அபராதம்

Related Articles

Back to top button