சோவா சூ காங் கார்பார்க்கில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆடவர் கைது

சோவா சூ காங் அவென்யூ 3இல் உள்ள கார்பார்க் ஒன்றில் 52 வயது ஆடவரை கொலை செய்ய முயன்றதாக 60 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (ஜூன் 13) தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 9.35 மணியளவில், கார்பார்க்கில் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க : “அதிக தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவு”
மேலும், கத்திக் குத்துக் காயங்களுடன் சுயநினைவுடன் இருந்த 52 வயது ஆடவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் வருவதற்குள் சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார், ஆனால் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் அது கூறியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒருவொருக்கொருவர் அறிந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.
சந்தேக நபர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்படும்.
இதையும் படிங்க : நார்த் பிரிட்ஜ் சாலை குடியிருப்பில் தீ விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி