சிங்கப்பூரில் கிளீனர் வேலை செய்யும் ஊழியர் மரணம் – 3 நாள் வேலைக்கு வராத நிலையில் சடலம் மீட்பு

சிங்கப்பூர்: மூன்று நாட்களாக வேலைக்கு வரவில்லை என்ற நிலையில் தேடப்பட்ட துப்புரவு ஊழியர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் தங்கும் வீட்டில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

சென்னை வந்த சிங்கப்பூர் நபரை கொடுமை செய்த போலீஸ்..”அடித்து உன்னை ஜெயிலில் தள்ளுவேன்” என மிரட்டல்

அவரது சடலம், கடந்த செப். 2, 2022 அன்று ஹௌகாங் அவென்யூ 3 இல் உள்ள பிளாக் 2 இன் மூன்றாவது மாடியில் கண்டெடுக்கப்பட்டது.

அவரின் சக ஊழியர் ஒருவர் அந்த சடலத்தை கண்டுபிடித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹௌகாங் அவென்யூ 5 இல் உள்ள பிளாக் 327 இன் காஃபி ஷாப்பில் துப்புரவாளராகப் அவர் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு வயது 63.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் – மீறினால் சிறை

Related Articles

Back to top button