சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க முடியாது… இந்த தவறை செய்ய வேண்டாம் – MOM கடும் எச்சரிக்கை

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவங்களுக்கு மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (செப்.1) கடும் எச்சரிக்கை செய்துள்ளது.
கடுமையான மற்றும் ஆபத்தான வேலையிட விபத்துகள் காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் மரணங்கள் அதிகரித்துள்ளன.
சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இனி நிம்மதி.. செப். 1 முதல் எல்லாமே மாறும்
இதை தொடர்ந்து, பாதுகாப்பற்ற வேலை சூழல் அல்லது மோசமான இடர் கட்டுப்பாடுகள் கண்டறியப்படும் நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் இந்த எச்சரிக்கையை செய்துள்ளது.
மேற்கொண்ட பாதுகாப்பற்ற சூழல் கண்டறியப்பட்டால் மூன்று மாதங்கள் வரை புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்று MOM கூறியுள்ளது.
நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும் தவறுகளுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, வேலையிடத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உள்ளது.