சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ரமலான் மாத கூட்டு தொழுகைக்கு அனுமதி!

பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, ரமலான் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் கூட்டு தொழுகைக்கு செல்லலாம்.

தங்கும் விடுதிகளில் உள்ள ஆபரேட்டர்கள் கூட்டு தொழுகைகளை நடத்த அனுமதி வழங்குவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் தராவீஹ் கூட்டு தொழுகையும், நோன்பு பெருநாள் தொழுகையும் நடைபெறும் என்று மனிதவள அமைச்சு (MOM) இன்று (ஏப்ரல் 9) தெரிவித்துள்ளது.

இந்த கூட்டு தொழுகைகளை ஒழுங்கமைக்க தங்கும் விடுதி ஆபரேட்டர்கள் MOMஇன் கீழ் உள்ள ACE குழு மூலம் விண்ணப்பிக்கலாம்.

பிரார்த்தனைகளை தங்குமிடங்களுக்குள் பல்நோக்கு அரங்குகள் அல்லது பொதுவான அறைகள் போன்ற பொருத்தமான இடங்களில் நடத்தலாம்.

மேலும், இந்த தொழுகைகளில் இரண்டு அமர்வுகளை நடத்த அனுமதிக்கப்படும் எனவும் MOM தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button