சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு சிறை: கழிவறையில் எட்டிப்பார்த்த ஊழியர் – அலறியடித்த பெண் புகார்

சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு ஒருவாரம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று வியாழன் (செப்டம்பர் 29) தீர்ப்பளித்தது.

கழிவறையில் பெண் ஒருவரை எட்டிப்பார்த்ததாக கூறப்படும் 38 வயது பாண்டியன் செல்வகுமார் என்ற ஊழியர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நவ., 30ல், பாண்டியன் செல்வகுமார் கட்டுமான ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தியாவைச் சேர்ந்த பாண்டியன் அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதே போல சில மாதங்களுக்கு முன்பு செராங்கூன் உணவகத்தில் மற்றொரு பெண்ணின் முன் பகுதியில் கைவைத்ததாக பாண்டியன் மீது தனிக் குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.

கோழி, ஆடு, மாட்டிறைச்சிகளை கொண்டு வந்த வெளிநாட்டு ஊழியர் – சாங்கி ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்

பெண்கள் கழிப்பறை

29 வயதான அந்த பாதிக்கப்பட்ட பெண், முதல் மாடியில் உள்ள பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த தனது அலுவலகத்தை விட்டு சென்றுள்ளார். அப்போது பாண்டியன் முகம் கழுவும் பகுதியில் நிற்பதை அவர் கவனித்தார்.

அந்த பெண் முதலில் கழிப்பறையை விட்டு வெளியேற விரும்பினார், ஆனால் அங்கு எதையோ சரிசெய்ய தாம் முயற்சி செய்து கொண்டிருப்பதாக பாண்டியன் கூறினார்.

பின்னர் நீங்கள் கிளம்பவில்லையா? என்று அப்பெண் கேட்டதற்கு, கிளம்ப போகிறேன் என்று பாண்டியன் பதில் கூறியுள்ளார்.

அதோடு அந்த பெண் கழிவறையின் கதவு உள்ள அறைக்குள் சென்றுள்ளார், அங்கேயே தாம் ஏதும் செய்யாமல் நோட்டமிட்டுள்ளார் அப்பெண்.

வெளிநாட்டு ஊழியர்கள் 56 பேரிடம் சுமார் S$400,000 லஞ்சம்: சிங்கப்பூரில் சிக்கிய மேலாளர்; உடைந்தையாக சில ஊழியர்கள்

எட்டி பார்த்த பாண்டியன்

அந்த பெண் சந்தேகித்தது போல, பக்கத்துக்கு அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது இரண்டு அறைக்கும் இடையே உள்ள இடைவெளியில் பாண்டியனின் நிழலை அவர் கவனிக்க தொடங்கினார்.

திடீரென்று, அப்பெண் பாண்டியனின் முகம் பாதி தெரிவதை கண்டு நடுங்கி போனார். கீழ் பகுதியில் இருந்து ஒரு கண்ணை வைத்து அவர் பார்த்துள்ளார்.

அதனை அடுத்து அப்பெண் பயந்து கத்தினார், பின்னர் வேகமாக அறையை விட்டு வெளியேறினார், அப்போது கையில் ஒரு சிறிய குப்பைத் தொட்டியுடன் பாண்டியன் நிற்பதைப் அவர் பார்த்தார். அதற்கு பாண்டியன் “குப்பைகளை வீசுவதாக” அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் செய்திகளை மட்டும் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்!

Related Articles

Back to top button