வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க கூடாது… நிறுவனத்துக்கு மனிதவள அமைச்சகம் உத்தரவு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க கூடாது என்று நிறுவனம் ஒன்றுக்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
waterproofing contractor – நீர்ப்புகா ஒப்பந்த ஊழியர் ஒருவர் கூரை வழியாக 8 மீட்டருக்கும் கூடுதலான உயரத்தில் இருந்து விழுந்து பல்வேறு கடும் காயங்களுக்கு ஆளானார்.
Le Fong Building Services எனும் நிறுவனத்தின் ஊழியரானா அவர், வெளிச்சத்திற்காக வைக்கப்படும் கூரையில் காலடி வைத்ததால் அது உடைந்து கீழே விழுந்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
கடுமையாக கீழே விழுந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் MOM கூறியுள்ளது.
இந்நிலையில், MOM வேலையிடத்தை ஆய்வு செய்ததாகவும், விபத்து ஏற்படும் வாய்ப்பும் ஊழியர்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பற்ற வேலை நடைமுறைகளையும் அங்கு கண்டறிந்ததாக MOM கூறியுள்ளது.
இந்த மாதம் 1 முதல் பிப்ரவரி 28, 2023 வரையிலான ஆறு மாத கால உயர்தர பாதுகாப்பு நடைமுறையின் கீழ், கடும் நடவடிக்கைகளுக்கு உட்பட்ட முதல் நிறுவனம் இதுவாகும்.
ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் பிரபல சிங்கப்பூர் நிறுவனம் – வேறு வேலை இல்லாமல் தவிக்கும் நிலை