சிங்கப்பூரில் புதிதாக 24 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – 3 பேருக்கு தொடர்பு கண்டறியப்படவில்லை

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 16) புதிதாக 24 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

அதனுடன் சேர்த்து சிங்கப்பூரில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 62,339ஆக உள்ளது.

இதையும் படிங்க : ஆங் மோ கியோ குடியிருப்பில் தீ: 130 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம் – 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

உள்நாட்டில் புதிதாக 19 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, அவை அனைத்தும் சமூக அளவில் ஏற்பட்டுள்ளன.

16 பேருக்கு முந்தைய பாதிப்புகளுடன் தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது, அவர்களில் 10 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேர் கண்காணிப்பு சோதனை மூலம் கண்டறியப்பட்டன.

மீதமுள்ள 3 பேருக்கு தொடர்பு தற்போது கண்டறியப்படவில்லை.

மேலும், தங்குமிடங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் வந்ததில் இருந்து தனிமையில் வைக்கப்பட்டனர். இவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கடைவீட்டில் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

Related Articles

Back to top button