சிங்கப்பூரில் COVID-19 மருத்துவ சிக்கல்கள் காரணமாக 32வது மரணம்

சிங்கப்பூரில் COVID-19 மருத்துவ சிக்கல்கள் காரணமாக 32வது மரணம் ஏற்பட்டுள்ளது.
அவர், டான் டொக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 70 வயது ஆடவர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னர் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் மற்றும் இருதய பாதிப்புகள் இருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
NCID அவரின் குடும்பத்தினரை அணுகி தேவையான உதவிகளை செய்து வருவதாக அமைச்சகம் கூறியுள்ளது.