சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 83 பேர் மீது விசாரணை

சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 83 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர்கள், 20 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று போலீசார் இன்று (மார்ச் 22) கூறியுள்ளனர். இவை நான்கு தனித்தனியான வழக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், 46 ஆண்களும் 37 பெண்களும் ஒன்றுகூடியதாக குறிப்பிட்டுள்ளனர், பொது பொழுதுபோக்கு மற்றும் மதுபானம் ஆகியவை முறையான உரிமம் இல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
முதல் வழக்கில், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி மேரிமவுண்ட் சாலைக்கு அருகிலுள்ள பெமிம்பின் டிரைவ் வழியாக உள்ள ஒரு அலுவலகத்தில் ஒன்றுகூடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதே போல, கடந்த மார்ச் 1ம் தேதி, ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள கடை ஒன்றில் மற்றொரு கூட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மூன்றாவது வழக்கு, கடந்த மார்ச் 13 அன்று ஜலான் புக்கிட் மேராவில் உள்ள அலுவலகத்தில் ஒன்றுகூடியதாக தகவல் கிடைத்தது.
இறுதியாக கடந்த மார்ச் 18 அன்று Ubi அவென்யூ 3இல் உள்ள அலுவலகத்தில் ஒன்றுகூடியவர்களை போலீசார் சோதனை மூலம் கண்டறிந்தனர்.
இந்த நான்கு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.