NUS UTown விடுதியில் COVID-19 சிறப்பு பரிசோதனை – 437 பேருக்கு வைரஸ் இல்லை

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) UTown விடுதியிலிருந்து கடந்த மார்ச் 20 அன்று சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரியை சோதித்ததில், அதில் கோவிட் -19 வைரஸ் பரவும் மூலக்கூறு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இது கடந்தகால தொற்றுநோயிலிருந்து குணமடைந்த குடியிருப்பாளர்களின் மூலம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு MOH சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குணமடைந்த குடியிருப்பாளர்களைத் தவிர மொத்தம் 438 பேர் சோதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதில் 437 முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன, மேலும் ஒருவரின் முடிவு நிலுவையில் உள்ளது.