சிங்கப்பூரில் மேலும் 3 வாரங்களுக்கு சம்பள ஆதரவு!

சிங்கப்பூரில் வைரஸ் நோயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மேலும் 3 வாரங்களுக்கு சம்பள ஆதரவு வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை COVID-19 வைரஸ் தொடர்பான அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் வருகை அட்டை விண்ணப்ப சேவை குறித்த பொது ஆலோசனை – ICA
உடற்பயிற்சி நிலையங்கள், உணவு மற்றும் பான கடைகள், கலைக் குழுக்களுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல், 3 வாரங்களுக்கு அது பொருந்தும்.
அதாவது, அவர்களுக்கு 50 சதவீத சம்பள ஆதரவு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
30 சதவீத சம்பள ஆதரவு பெறும் வணிகங்கள்:
- திரையரங்குகள்
- சில்லறை வர்த்தகம்
- அருங்காட்சியகங்கள்
- கலைக்கூடங்கள்
- வரலாற்றுத் தலங்கள்
- குடும்பக் கேளிக்கை அம்சங்கள்
அடுத்த மாதம் நடுப்பகுதி வரை வாடகை தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உரிய ஆவணம் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக சிங்கப்பூர் வந்தவருக்கு தொற்று உறுதி