சிங்கப்பூரில் 12 – 39 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்!

சிங்கப்பூரில் 12 முதல் 39 வயதுடைய சிங்கப்பூர் குடிமக்கள் இன்று (ஜூன் 11) முதல், கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு ஆன்லைனில் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இன்னும் தடுப்பூசி போடப்படாத சுமார் 1.5 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பெரிய குழு இது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தளர்த்தப்பட உள்ள தற்போதைய கட்டுப்பாடுகள்..!

12 வயதாகும் குழந்தைகள் முன்பதிவு செய்ய தகுதி பெறுவதற்கு முன், அவர்களின் பிறந்த நாள் இந்த ஆண்டு கடந்திருக்க வேண்டும் என MOH கூறியுள்ளது.

அந்த தடுப்பூசிக்கு, Vaccine.gov.sg என்ற இணையத்தளம் மூலம் அவர்கள் முன்பதிவு செய்யலாம்.

வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர், முதல் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி ஆலோசனை கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் ஐந்தில் ஒரு பங்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Related Articles

Back to top button