தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணம் மேற்கொள்ளலாமா?

COVID-19 வைரஸ் தடுப்பூசி செலுப்பட்ட பயணிகளுக்கு எல்லை தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மாற்றம் குறித்து பரிசீலனை செய்ய கூடுதல் தகவல்கள் தேவை என சுகாதாரத்துறை மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழும்பியது, அதற்கு அமைச்சர் பதிலளித்தார்.
கூடுதல் தகவல் அவசியம்
இதுவரை தடுப்பூசி பாதுகாப்பு குறித்த தகவல்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு எல்லை கட்டுப்பாடுகளில் மாற்றம் குறித்து பரிசீலிக்க கூடுதல் தகவல் அவசியம் என்றும் கூறினார்.
பயணிகளுக்கு பரிசோதனை, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு போன்ற எல்லைக் கட்டுப்பாடுகள் அதில் அடங்கும்.
ஸ்மார்ட்போன்கள் இல்லாத நபர்கள் உட்பட ஒருவரின் தடுப்பூசி நிலையை நிரூபிக்க எளிதான மற்றும் வசதியான நடவடிக்கையை சுகாதார அமைச்சகம் (MOH) ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தனிநபர்கள் தாங்கள் போட்டுக்கொண்ட தடுப்பூசி குறித்த நிலையை தயாராக இருக்கும்போது எவ்வாறு காட்ட முடியும் என்பது குறித்த தகவல்களை MOH பகிர்ந்து கொள்ளும் என்றார்.
பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது, அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் மாற்றப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராயவும் அதிக தகவல்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தொடர்ந்து அறிவியல் ரீதியான தகவல்களை மதிப்பீடு செய்வதோடு, அதன் தகுதிகளை மறுஆய்வு செய்யும் என்றும் கூறியுள்ளார்.