தடுப்பூசி 2ஆம் டோஸ்க்கு பிறகு இதய அழற்சியை தொடர்பாக 4 சம்பவங்கள் பதிவு – அனைவரும் குணமடைந்தனர்!

கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் போட்ட பின்னர், இதய அழற்சியை குறித்து நான்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி (EC19V) தொடர்பான நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், 18 முதல் 30 வயதுடைய ஆண்களுக்கு ஏற்பட்ட இதய அழற்சியை தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் இருந்து குணமடைந்தனர் அல்லது டிஸ்சார்க் செய்யப்பட்டனர் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 21 பேருக்கு கோவிட்-19… 12 பேர் சமூக அளவில் பாதிப்பு

அவர்களுக்கு, மயோர்கார்டிடிஸ் என்னும் இதய தசையின் அழற்சி, பெரிகார்டிடிஸ் என்னும் இதயத்தின் வெளிப்புற புறணி அழற்சி ஆகியவை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்ற சில நாட்களில் இந்த பாதிப்புகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ION ஆர்ச்சர்ட் மால் 4 நாள்களுக்கு மூடப்படும்

Related Articles

Back to top button