கனரக வாகனம், சைக்கிள் மோதி விபத்து – சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

மெரினா ஈஸ்ட் டிரைவில் கடந்த மே 31ஆம் தேதி அன்று கனரக வாகனத்துடன் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் 14 வயதான சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஊழியர்களுக்கு SafeEntry நுழைவை உறுதிசெய்ய தவறிய 26 நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு
37 வயதான கன ரக டிரெய்லர் ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார், இதனை சி.என்.ஏவின் கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறை நேற்று தெரிவித்தனர்.
அன்று மாலை 4.25 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. சம்பவ இடத்தில் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக துணை மருத்துவர்கள் உறுதி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்த விபத்து தொடர்பான படங்கள், SG Road Vigilante பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டன.