“டெல்லி முதலமைச்சரின் கருத்தில் எந்த உண்மையும் இல்லை” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று வெளியிட்ட பதிவில், மாறுபாடு அடைந்துள்ள கோவிட்-19 தொற்று கிருமியின் புதிய வகை சிங்கப்பூரில் உருவாகியுள்ளதாக கூறியிருந்தார்.
இது இந்தியாவில் மூன்றாவது வைரஸ் பரவல் அலையை ஏற்படுத்தும், மேலும் அது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : பெடோக் ரிசெர்வாயரில் ஆடவர் சடலம் ஒன்று மிதந்த நிலையில் கண்டெடுப்பு
மேலும், சிங்கப்பூருக்கு விமான சேவையை நிறுத்தும்படி இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் பதிவில் வெளியிட்டிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்; அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட தகவல் தவறானது என்று கூறியுள்ளது.
இந்த மாறுபாடு வைரஸ், B.1.617 வகையை சார்ந்தது எனவும், இது இந்தியாவில் தான் முதல் கண்டுபிடிக்கபட்டது, சிங்கப்பூரில் அல்ல என அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.