பூன் லேவில் நடந்த இறுதி சடங்கில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட ஆடவர் கைது

பூன் லேவில் நடந்த இறுதி சடங்கில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதற்காக, 42 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (ஜூன் 15) தெரிவித்துள்ளது.

பிளாக் 191 பூன் லே டிரைவ் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி சடங்கில் பொதுமக்கள் திரண்டனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 3.7 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டதில் 157 கடுமையான பாதிப்புகள் பதிவு

அதனை அடுத்து, சட்டவிரோத குழுக்களின் நபர்கள் என சந்தேகிக்கப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டதாக இன்று காவல்துறை தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்களும் 17 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.

42 வயதான சந்தேக நபர் உட்பட மொத்தம் 15 கைது நடவடிக்கைகள் இதில் மேற்கொள்ளப்பட்டன.

இறுதி ஊர்வலத்தின் பல காணொளிகள் ஆன்லைனில் பரப்பப்படுவதை அறிந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு தொற்று உறுதி

Related Articles

Back to top button