சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் விடுதி தமிழ் ஊழியர்களுக்கு “தமிழ் புத்தாண்டு” சிறப்பு அன்பளிப்புகள்!

சிற்றுண்டிகள், உணவுகள்

சிங்கப்பூரில் வருடா வருடம் நோன்பு காலங்களிலும், தமிழ் புத்தாண்டு காலங்களிலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த வருடம் இரண்டுமே ஏப்ரல் மாதத்தில் வந்துள்ளது சிறப்பு. இன்று ஏப்ரல் 11ஆம் தேதி, பெரும்பாலான முஸ்லிம் வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் தங்கும் விடுதிகளில் சுமார் 70,000 பேரிச்சம்பழங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் செல்லும் முன் என்னென்ன Documents கொண்டு செல்ல வேண்டும் ? – Work permit ஊழியர்களுக்கு என்ன ? – முழு விவரம்

அதே அடிப்படையில், தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களுக்கு சிற்றுண்டிகள், உணவுகள் வழங்கப்படும்.

அதிமான இந்து சமூக வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் விடுதிகளில் வரும் தமிழ் புத்தாண்டு அன்று முறுக்கு, லட்டு போன்ற சுமார் 5,000 சிற்றுண்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்படும் என இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்! 

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரில் கட்டிட பராமரிப்பு பணியின்போது 7 மாடி கீழே விழுந்து “பொறியாளர்” பலி

 

Related Articles

Back to top button