பாலேஸ்டியர் சாலையில் கிரேன் விழுந்து விபத்து – ஓட்டுநர் கைது

சிங்கப்பூர் பாலேஸ்டியர் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியில் இருந்து கிரேன் விழுந்ததை அடுத்து, லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த கிரேனின் ஒரு பகுதி பழுதடைந்து சாலையில் விழுந்ததில், மூன்று பாதைகள் தடைபட்டது.
இதையும் படிங்க : தனிநபர் நடமாடும் சாதனம் (PMD) தீப்பிடித்து விபத்து – ஆடவர் சிகிச்சை பலனின்றி மரணம்
37 வயதான அந்த ஆடவர், காலை 10.30 மணியளவில் லாவெண்டர் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக சுமார் நான்கு மணி நேரம் சாலை மூடப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.
கனரக மோட்டார் வாகனம் 4.5 மீட்டர் உயரத்தை தாண்டியதாகவும், அதை பாதுகாப்பாளர் துணை இல்லாமல் ஒட்டியதாகவும், மேலும் அது சட்டவிரோதமானது என்றும் காவல்துறை தெரிவித்தனர்.
ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : “சிங்கப்பூரில் சூழல் தொடர்ந்து மேம்படும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்”