வெளிநாட்டு ஊழியர் போதையில் அட்டகாசம்; ஸ்ரீ முருகன் சூப்பர் மார்க்கெட்டை தும்சம் செய்த ஊழியர் கைது

ஈஸ்ட்பாயிண்ட் மாலில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் (செப். 30) மாலை ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஒருவர் கடையை தலைகீழாக மாற்றி ஊழியர் அட்டகாசம் செய்துள்ளார்.

இது தொடர்பான பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது, அதில் மாலின் நான்காவது மாடியில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் சூப்பர் மார்க்கெட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய ஊழியர் திருச்சியில் கைது – பாஸ்போர்ட் சோதனையில் குற்றம் அம்பலம்

கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, பல அலமாரிகள் சாய்க்கப்பட்டதை படத்தின் வாயிலாக காண முடிகிறது. கடையில் இரண்டு ஆண்கள் சண்டையிடுவதைக் கண்டதாக அவ்வழியாக சென்ற வழிப்போக்கர்கள் ஷின்மின் நியூஸிடம் கூறினர்.

அதாவது ​​10க்கும் மேற்பட்ட அலமாரிகள் சாய்க்கப்பட்டு, பொருட்கள் தரையில் சிதறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 31 வயதுடைய நபர் ஒருவர் இந்த குற்றமிழைத்ததற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், குடிபோதையில் சச்சரவை ஏற்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர் கடையின் ஊழியர் என்று கூறப்பட்டுள்ளது. அவர் பணியில் இருந்தபோது குடித்துவிட்டு சக ஊழியருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆடவர் அந்த இடத்திலேயே வேலையை விட்டு தூக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் வேலையின்போது 9வது மாடி உயரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஊழியர் – பதைபதைக்கும் வீடியோ

 

 

Related Articles

Back to top button