தீர்வை செலுத்தப்படாத 2,100க்கும் மேற்பட்ட சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் பறிமுதல்!

சுவா சூ காங் அவென்யூ 5 பகுதியில் உள்ள அடுக்குமாடி கார் நிறுத்தத்தில் நடந்த சோதனை நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதில் 2,100க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறை (மார்ச் 23) தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 16ம் தேதி மாலை, வேனில் இருந்து பல பெட்டிகள் மற்றொரு காருக்கு மாற்றுவதை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் கவனித்தனர்.
அதனை அடுத்து, அந்த வாகனங்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 2,117 அட்டைப்பெட்டிகள் மற்றும் 126 பாக்கெட்டுகள் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 33 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 2 வாகனங்கள் மற்றும் S$6,240 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.