சிங்கப்பூரில் தீர்வை வரி செலுத்த தவறிய சிகரெட்டுகளை கடத்திய சந்தேகத்தில் 3 பேர் கைது

சிங்கப்பூரில் தீர்வை வரி செலுத்த தவறிய சிகரெட்டுகளை கடத்திய சந்தேகத்தில் 28 – 44 வயதுக்கு உட்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 15ஆம் தேதி, துமாசிக் Fairway வெளியே சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்றை கரையோர காவல்படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்களின் விடுப்பு குறித்த அறிவிப்பு
சோதனை செய்ததில் சுமார் 360க்கும் அதிகமான தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சட்டத்தின்படி, தீர்வை செலுத்தப்படாத பொருட்களை விநியோகம் செய்வது, விற்பனை செய்வது, தன் வசம் வைத்திருப்பது குற்றம் ஆகும்.
இதையும் படிங்க : சிமென்ட் கலவை வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து – பேருந்து ஓட்டுநர், 2 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி