சிங்கப்பூர் கடலில் சடலம் கண்டெடுப்பு – 24 வயது நபர்; “பாவம் வாழ வேண்டிய வயது”

East Coast Park நீரில் சடலமாக மிதந்த 24 வயது இளைஞர் ஒருவர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை அவர் அங்கு சடலமாக மிதந்தது குறித்து சிங்கப்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் பிறகு சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார், சடலம் நீரில் மிதப்பதை கண்டனர். பின்னர் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
சிங்கப்பூரில் ஊழியரை காணவில்லை – எங்கே சென்றார் என தெரியாமல் குழப்பம்
அவருக்கு உயிரோட்டம் இருக்கிறதா என சோதித்ததில், அவர் முன்னரே இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இதில் சதிச்செயல் ஏதும் இல்லை என கூறிய போலீசார், இது தற்கொலையா? அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
சிங்கப்பூர் (மட்டும்) தொடர்பான வேலைவாய்ப்புகளை பெற டெலெக்ராம் –
https://t.me/tamildailysg
சிங்கப்பூர் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் பலி… இந்த மாதத்தில் மட்டும் 5 பேர் மரணம்