வீட்டு பணியாளர்கள் இருவர் மீது காரை மோதிய ஓட்டுனருக்கு சிறை – வாகனம் ஓட்டத் தடை

வீட்டு செல்ல நாய்களுடன் வெளியே நடந்து சென்றுகொண்டு இருந்த இரண்டு வீட்டு பணிப்பெண்களை வயது முதிர்ந்த ஓட்டுநர் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் செல்லப்பிராணி ஒன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், வீட்டு பணிப்பெண்கள் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
71 வயதான சோஹ் போ ஜியோக் என்ற அந்த ஓட்டுநர் இன்று (ஜூலை 2) ஐந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், அவருக்கு 18 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு கவனக்குறைவாக, பணிப்பெண்களில் ஒருவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மற்றொரு பணிப்பெண்ணுக்கு கடுமையாக காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
கடந்த 2018 அன்று, ஆடம் சாலைக்கு அருகே இருவழிச் சாலையில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.