சிங்கப்பூரில், ஐந்து நாட்களுக்குள் மூன்று ஊழியர்கள் தனித்தனி விபத்துக்களில் மரணம்!

சிங்கப்பூரில் இந்த ஜூன் மாதத்தின் ஐந்து நாட்களுக்குள் மூன்று ஊழியர்கள் தனித்தனி விபத்துக்களில் மரணித்ததாக கூறப்பட்டுள்ளது.
ஒருவர் உயரத்தில் இருந்து விழுந்தும், ஒருவர் நீரில் மூழ்கியும், மற்றொரு ஊழியர் ஃபோர்க்லிப்டிலிருந்து பொருட்கள் மேலே விழுந்தும் உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் காரணமாக 35வது மரணம்
இந்த மூன்று சமீபத்திய வேலையிட விபத்துக்கள் கடந்த ஜூன் 10 முதல் ஜூன் 14 வரை ஏற்பட்டதாகவும், மேலும் அதனை விசாரித்து வருவதாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.
அவர்கள் 3 பேரும், பங்களாதேஸ், மியான்மர் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அது கூறியுள்ளது.
இந்த ஆண்டில் மொத்தம் ஏற்பட்ட ஆபத்தான வேலையிட விபத்துக்களின் எண்ணிக்கை 22ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாதியில் பதிவான 17 வேலையிட இறப்புகளை விட அதிகமாகும்.
அதே போல, 2019ஆம் ஆண்டில் 17 ஊழியர்கள் வேலையிட விபத்துகளில் இறந்துள்ளனர், மேலும் 2018இல் 18 பேர் இறந்தனர்.
இதையும் படிங்க : “சிங்கப்பூர்-தமிழ்நாடு” இடையே பயண திட்டம் உள்ளவர்களுக்கு நற்செய்தி!