“பிள்ளை வளர்ப்பு கடமைகளை அதிகமாக தந்தைகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்” – பிரதமர் லீ

இந்த தந்தையர் தினத்தில் அனைத்து தந்தைகளுக்கும் வாழ்த்துக்களை சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
காலப்போக்கில் தந்தையின் பொறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதாக திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில், தந்தையின் பொறுப்புக்கு என்பது குடும்பத்திற்காக வேலை செய்து பணம் சம்பாதிப்பது, மேலும் குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களின் பொறுப்பாக இருந்தது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில், உணவகங்களில் இன்று முதல் 2 பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி
சமீபத்திய ஆண்டுகளில் இந்த பொறுப்பு மாறியுள்ளதாக கூறிய அவர், அதிகமாக பிள்ளை வளர்ப்பு கடமைகளை தந்தைகள் மேற்கொள்கின்றனர், என்றார்.
“இந்த தொற்றுநோய் சூழல், தந்தைக்கு சவாலாகவும், குழந்தைகளை வளர்க்க உதவுவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமான பிணைப்பை வளர்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.”
“குழந்தைகள் நீங்கள் நினைப்பதை விட வேகமாக வளர்கிறார்கள், அவர்களுடன் நீங்கள் உருவாக்கும் நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ” என்றும் திரு லீ கூறினார்.
தாத்தாக்கள், புதிதாகத் தந்தையாகப் போகும் ஆடவர்களுக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க : முகக்கவசம் அணிய மறுத்த வெளிநாட்டவருக்கு ஆறு மாத சிறை – பாஸ்போர்ட் பறிமுதல்