சிங்கப்பூரில் ஓட்டுனரை மோதியவருக்கு S$5,000 அபராதம் – ஒரு வருடம் வாகனம் ஓட்டத் தடை

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மோதிய 85 வயதான ஆடவர் ஒருவருக்கு S$5,000 அபராதம் நேற்று (ஜூன் 14) விதிக்கப்பட்டுள்ளது

மேலும், அவருக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டு புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம்

இதில் பாதிக்கப்பட்ட நபருக்கு கால் முறிந்தும், கால்விரல் இடம்பெயர்வு ஏற்பட்டும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஊன்றுகோல் குச்சியுடன் நீதிமன்றத்தில் ஆஜரான கூ டீ வா, கவனக்குறைவாக கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம், செப்டம்பர் 25, 2019 அன்று காலை 11.30 மணியளவில் நடந்தது.

பெடோக் சவுத் ரோட்டில் உள்ள பிளாக் 40இல் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்திலிருந்து தனது காரில் சென்றுகொண்டிருந்த போது, ​​29 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு வழி கொடுக்கத் தவறியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட நபர் சுமார் 25 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மணிக்கட்டு மற்றும் தொடை ஆகியவற்றில் பல முறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க : சோவா சூ காங் கார்பார்க்கில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆடவர் கைது

Related Articles

Back to top button