கெய்லாங் பஹ்ரு நடன ஸ்டுடியோவில் தீ – 11 அவசர கால வாகனங்கள் சம்பவ இடத்தில்…

கெய்லாங் பஹ்ருவில், ஜலான் பெசார் டவுன் கவுன்சிலுக்கு அருகில் உள்ள நடன ஸ்டுடியோவில் இன்று (ஜூலை 28) தீ விபத்து ஏற்பட்டது.
இன்று காலை சரியாக 6.35 மணியளவில் 70A கெய்லாங் பஹ்ருவில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) தகவல் கிடைத்தது.
இரண்டு மாடு கட்டடத்தின் 2வது மாடியில் தீ பற்றி எரிந்தது என்றும் SCDF பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 அவசர வாகனங்கள் அனுப்பப்பட்டன.